விபத்தில் வாலிபர் பலி

சாயல்குடி: முதுகுளத்துார் அருகே ஏனாதியைச் சேர்ந்தவர் செந்துார்பாண்டியன் மகன் பூமணிகண்டன் 28. இவர் நேற்று முன்தினம் மாலை தனது டூவீலரில் சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அவருடன் ஒச்சத்தேவன் கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி காளீஸ்வரி பின்னால் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் மலட்டாறு பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது ஆட்டோ திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் டூவீலர் ஓட்டி வந்த பூமணிகண்டன் தவறி விழுந்ததில் ஆட்டோவின் பின்பகுதியில் மோதியதில் பூமணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூமணிகண்டன் உயிரிழந்தார். உடன் பயணித்த காளீஸ்வரி காயமடைந்தார். சாயல்குடி போலீசார் ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement