கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
வானுார்: விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தைலாபுரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த முகாமை மண்டல இணை இயக்குனர் செல்வகுமார், பேராசிரியர் பாக்கியராஜ், உதவி இயக்குநர்கள் ரவிராஜா, முருகவேணி, உதவி இயக்குநர் (நோய் புலனாய்வு பிரிவு) கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர் தனபால்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில் நோய் தாக்கிய, கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டல் மற்றும் மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கால்நடை பராமரிப்பு துறை திட்டம் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கால்நடை வளர்ப்பவர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சுமதி, மகேஸ்வரி, ஸ்ரீகலா, தங்கமுத்து, நடமாடும் கால்நடை மருத்துவர் சர்குணன், நோய் புலனாய்வு பிரிவு சரஸ்வதி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.