சேலம் வழியே ரயிலில் கடத்திய 4.1 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் வழியே கேரளா சென்ற ரயிலில், கேட்பா-ரற்று கிடந்த, 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்-யப்பட்டது.


ரயிலில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்-தப்படுவதை தடுக்க, ரயில்வே போலீசில் தனிப்-படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் உட்கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார், நேற்று திப்ருகர் - கன்னி-யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜோலார்பேட்-டையில் இருந்து, சேலம் வரை ஒவ்வொரு பெட்-டியாக சோதனை செய்தனர். அப்போது, பின்பக்க-முள்ள முன்பதிவில்லா பெட்டியில், கழிவறை அருகே கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்தது. அதை திறந்து பார்த்த போது, பண்டல்களாக சுற்-றப்பட்டு, 4.1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்-தது. ரயில் பயணிகளிடம் விசாரணை நடத்தி-யதில் யாருக்கும் தெரியவில்லை என்றனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்-சாவை, சேலம் ரயில்வே போலீசாரிடம் தனிப்-படை போலீசார் ஒப்படைத்தனர்.
சேலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார், கஞ்சா கடத்தி வந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Advertisement