பணி நிரந்தரம் செய்யக்கோரி தெர்மல் முன் போராட்டம்
மேட்டூர்: ஒப்பந்த பணி நிறுவன தொழிலாளர்களை நிரந்-தரம் செய்யக்கோரி, மேட்டூர் அனல்மின் நிலையம் முன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
அனல்மின் நிலையங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த நிறுவன ஊழியர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வை பாதிக்கும் ஆள்சேர்ப்பு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பு-களை மேல்முறையீடு செய்யாமல், தொழிலாளர் நலன் கருதி அமல்படுத்த வேண்டும் உள்பட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை, மேட்டூர் அனல்மின் நிலையம் முன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.மேட்டூர் அனல்மின் நிலைய திட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு
மண்டல செயலர் ஸ்ரீதேவி, தலைவர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் இளங்கோ போராட்டம் குறித்து பேசினார். 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலா-ளர்கள்
பங்கேற்றனர்.
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு