பா.ஜ., தமிழக நிர்வாகிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு
சென்னை: பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தத்திற்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் ஏ.பி.முருகானந்தம், 48; பா.ஜ., தமிழக பொதுச்செயலராக உள்ளார்.
இவருக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் இருந்ததால், தமிழக காவல் துறை சார்பில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சுழற்சி முறையில் நான்கு போலீசார், முருகானந்தத்திற்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்த, சில அமைப்புகள் முயற்சிப்பதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து, அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாநில போலீசாருக்கு பதில், மத்திய ரிசர்வ் போலீசார் எட்டு பேர், முருகானந்தத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (5)
Marai Nayagan - Chennai,இந்தியா
08 செப்,2026 - 13:38 Report Abuse
கோவை இஸ்லாமிய தீவிரவாதிகள் 1998 அல் உம்மா கூட்டம் இன்னும் திராவிட ஆட்சியில் செழிப்பாக இருந்ததது. எனவே பாதுகாப்பு தேவை 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
08 செப்,2026 - 12:13 Report Abuse
நித்திய கண்டம். மத்திய போலீஸ் பாதுகாப்பால் பூர்ண ஆயூள். 0
0
Reply
SJRR - ,இந்தியா
08 செப்,2026 - 11:43 Report Abuse
கட்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் பணத்தில் பாதுகாப்பு கொடுத்துவிட்டு, அந்த பணத்தை கொடுக்கும் மக்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பாதுகாப்பு தேவை. 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
08 செப்,2026 - 09:23 Report Abuse
இப்படியே போய்க்கொண்டிருப்பதால் தான் மக்களைப் பாதுகாக்க காவலர்களே மிகக் குறைவான அளவில் காவல்துறை செயல்படுகிறது. குற்றங்களும் அதிகரிக்கின்றன.
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க தனி காவல் படை அமைக்கலாம். அல்லது அரசியல்வாதிகளே பாதுகாப்பு அமைத்துக்கொள்ள அனுமதிப்பு ஒரு வரையறைக்குள் அந்த செலவை அரசு ஈடு செய்யலாம். 0
0
Reply
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
08 செப்,2026 - 07:28 Report Abuse
இந்த நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் அவர்கள் கட்சியை வளர்க்க எதையும் செய்வர். 0
0
Reply
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு
Advertisement
Advertisement