ஜாதிவாரி கணக்கெடுப்பால் ஓ.பி.சி., பிரிவினருக்கு ஆபத்து: காங்., தமிழக தலைவர் கணிப்பு
சென்னை: காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை:
ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறு படிகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மோடி அரசு அதை வழக்கம் போல அலட்சியம் செய்கிறது.
நாட்டு மக்களில் சரிபாதிக்கும் அதிகமானோர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரான ஓ.பி.சி., பிரிவினர் தான். ஆனால், பல ஆண்டுகளாக அதன் எண்ணிக்கை தெரியாமல், அதிகாரத்திலும் உரிமையிலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சரியான கணக்கெடுப்பு மட்டுமே, அவர்களின் உரிமைகளை பெற சாத்தியமாக்கும்.
ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு கொண்டு வரும் குழப்பமான கேள்விகளால், ஓ.பி.சி., எண்ணிக்கையும் பலமும் கடுமையாக சிதையும் ஆபத்து உள்ளது.
எனவே, இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின் கேள்விகளை ரத்து செய்து விட்டு, வெளிப்படையான புதிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்க தலை வேணும் என்று சொல்லுது
Yes Requiredமேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு