தேங்காய் வரத்து குறைந்ததால் விலை உயர்வு

ஆத்துார்: தேங்காய் வரத்து குறைந்துள்ளதால், கிலோ, 65 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல், கெங்-கவல்லி, கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதி-களில், தென்னை சாகுபடி கணிசமான அளவில் உள்ளன. இந்தாண்டு வெயில் தாக்கத்தின் கார-ணமாகவும், கோடை மழை குறைவாக பெய்த-தாலும் தென்னை மரத்தில் காய்ப்பு குறைந்தது. இங்கு விளையும் தேங்காய்கள், வியாபாரிகள் மூலம் மொத்தமாக எண்ணெய் தொழிற்சாலைக-ளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முற்றிய தேங்காய்கள் எண்ணெய் எடுக்கவும், லேசான தேங்காய்கள், சமையல் இதர உணவு தேவைக-ளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கடந்த இரு மாதங்களாக தேங்காய் கிலோ, 40 முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, தேங்காய் வரத்து குறைந்துள்ளதால், கிலோ, 60 முதல், 65 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.


இதுகுறித்து, தேங்காய் வியாபாரிகள் கூறியதா-வது:நோய் தாக்குதல், வறட்சியான சீதோஷ்ணம் தென்னை மரங்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. வெயில் அதிகரித்ததால் பிஞ்சுகள் உதிர்ந்து விளைச்சல் பாதித்துள்ளது. மழைக்காலம் துவங்-கியதும் தேங்காய் வெட்டுவது மேலும் குறையும். இதனால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர் விழாக்கள் வருவதால், ஆவணியில் இருந்து சில மாதங்களுக்கு தேங்காய்களின் தேவை அதிகரிக்கும். விலை குறைவதற்கான சூழல் தற்போது இல்லை. விநாயகர் சதுர்த்தி-யையொட்டி, மேலும் விலை அதிகரிக்கும். மூன்று வாரங்களாக, தேங்காய் மற்றும் இளநீர் வரத்து குறைந்து, அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இவ்வாறு கூறினர்.

Advertisement