அரசு பஸ்சில் மொபைல் திருடிய 2 பேருக்கு காப்பு

சேலம்: சேலம் மெய்யனுார், அர்த்தனாரி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன், 30. இவர் நேற்று காலை அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிந்தார். ஐந்து ரோடு அருகே வந்த போது, வாலிபர் இருவர் கலைச்செல்வன் சட்டை பையில் இருந்த, மொபைல் போனை திருடி தப்-பிக்க முயன்றனர். கூச்சலிடவே பொதுமக்கள் உதவியுடன், இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.


பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, மொபைல் போன் திருடிய ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை சேர்ந்த சிபாதாஸ், 20, மற்றும், 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement