சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு

சேலம்: சேலம் டவுன், முகம்மதுபுறா 2வது குறுக்கு தெருவை சேர்ந்த முதியவர் விஸ்வநாதன், 73. இவர், கடந்த 2021 நவ.,15ல், அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த, 10 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து, தன் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டல் செய்-துள்ளார். அதனால், சிறுமி அழுதபடி வீட்டுக்கு சென்று, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரி-வித்துள்ளார்.

அப்புகார்படி சேலம் டவுன் மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசா-ரணை முடிந்து, நேற்று, இந்த வழக்கில் நீதிபதி மீனாட்சி தீர்ப்பளித்தார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஸ்வநாத-னுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement