தங்கம் விலை இன்று உயர்வு; சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (செப் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 14,190 ரூபாய்க்கும், சவரன், 1,13,520 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாயாக இருந்தது.


நேற்றைய நிலவரம்




நேற்று (செப் 07) தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 14,130 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் குறைந்து, 1,13,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (செப் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை; ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement