தமிழக இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்.6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இரு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.9ம் தேதி தொடங்கி, செப்.16ல் முடிகிறது. செப். 17ம் தேதி அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப். 19ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அக்.6ம் தேதி தேர்தல் நடத்தி அக்.9ம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது இடைத்தேர்தல் பணிகளை அதிமுக துவங்கியது. போட்டியிட விரும்புபவர்கள் 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவித்துள்ளது.


இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், தலைமைக் கழகத்தில் இன்று (செப் 08) முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை, 3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து விருப்பமனு அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



சிறப்பு வீடியோ!




இடைத்தேர்தல் வேலையை முதல் கட்சியாக துவங்கியது அதிமுக; முக்கிய அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement