மனைவி கொலை கணவருக்கு ஆயுள்

சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சார்-வாய்புதுாரை சேர்ந்தவர் சிபி, 22. நெல் அரவை இயந்திர டிரைவர்.

இவரது மனைவி குமுத-வல்லி, 18. இவருடைய நடத்தையில் சந்தேகப்-பட்டு, சிபி, அடிக்கடி கண்டித்துள்ளார். அதனால், தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டு, கருத்துவேறு-பாடு நிலவி வந்தது. கடந்த 2017 செப்.,27ல், அவர்-களுக்குள் மீண்டும் ஏற்பட்ட பிரச்னையில், ஆவேசமடைந்த சிபி, துப்பட்டாவால் மனை-வியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். தலைவாசல் போலீசார் வழக்குபதிந்து சிபியை கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்-றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணை முடிந்து, நேற்று, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்-பட்டது. மனைவியை கொலை செய்த சிபிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து நிதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.

Advertisement