சக்தி மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா

ஆத்துார்: புது உடையம்பட்டி சக்தி மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.


ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் புது உடையம்பட்டி பகுதியில், சக்தி மாரியம்மன், விநாயகர், அய்-யனார், கருப்பண்ணார், காளியம்மன், சன்னாசி வரத பெருமாள் கோவில் மற்றும் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் கடந்த ஆக., 30ல், காப்பு கட்டுதல், சக்தி அழைத்தலுடன், தேர்த்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, விநாயகர், அய்யனார், கருப்பண்ணார், காளியம்மன் மற்றும் சக்தி மாரி-யம்மன் சுவாமிகளுக்கு பொங்கல் வைத்தல், பால் குடம் ஊர்வலம் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன.நேற்று முக்கிய நிகழ்வாக, சக்தி மாரியம்மன் தேர்த்திருவிழாவையொட்டி, 30 அடி உயர தேர் அலங்காரம் செய்யப்பட்டு, சக்தி மாரியம்மன் சுவாமியை தேரில் வைத்து, பூஜை செய்தனர். மாலை, 4:00 மணிளவில், அலங்கரிக்கப்பட்ட தேரை, ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் இழுத்து வந்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்த தேர், இரவு, 8:00 மணியளவில் கோவிலை வந்தடைந்-தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு
செய்தனர்.

Advertisement