'ஆன்லைன் டிரேடிங்'கில் நஷ்டம் சிவகங்கை வாலிபர் விபரீத முடிவு

பனமரத்துப்பட்டி: ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டதால், சிவகங்கை வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.


சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்-குமார், 32. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். சேலம் தாசநாயக்கன்பட்டி, சவுடாம்-பிகா நகரில் வாடகை வீட்டில் தங்கி, நண்பருடன் சேர்ந்து பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு பிறகும் செந்தில்குமார் தங்கியுள்ள வீடு, உள்பக்கமாக பூட்டியே இருந்தது. அக்கம்பக்கத்தில் இருந்த-வர்கள் சந்தேகப்பட்டு, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, மின்விசிறியில் கயிறு மூலம் துாக்கிட்டு செந்தில்குமார் சடலமாக தொங்-கினார்.ஆன்லைன் டிரேடிங் செய்ததால், லட்சக்க-ணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் தொல்லை அதிகமாகிவிட்டதால், இந்த முடிவை எடுத்தேன். யாரும் வருத்தப்படவேண்டாம் என அவர், எழு-திய கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை கைப்-பற்றி, மல்லுார் போலீசார் விசாரித்து வருகின்-றனர்.

Advertisement