உணவின் தரம் பற்றி புகார்: கோவைக்கு மூன்றாமிடம்
கோவை: உணவில் கலப்படம், தரமற்ற உணவு குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், பிரத்யேக தொடர்பு எண் மாநில வாரியாக உள்ளது. இதில் பதிவாகும் புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
கடந்தாண்டில் அதிக புகார்கள் பதிவு செய்து, அதற்கு நடவடிக்கை எடுத்ததில் சென்னை (294 புகார்கள்), காஞ்சிபுரம் (129) முதல் இரு இடங்களிலும் உள்ளது. கோவையில் 92 புகார்கள் பதிவாகி மூன்றாமிடத்தில் உள்ளது. இதேபோல இந்த ஆண்டு, ஆக.31 வரை, கோவையில் மட்டும் 66 புகார்கள் பதிவாகியிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'உணவு சார்ந்த புகார்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க, 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது unavupugar@gmail.com இ-மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். புகார் அளிப்பவர்களின் தகவல் ரகசியமாக வைக்கப்படும்' என்றனர்.
மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்