ஆண்டுக்கு 4 வர்த்தக சந்திப்பு சந்தை வாய்ப்பை அதிகரிக்கும் அரசின் அறிவிப்பை வரவேற்கும் ஏற்றுமதியாளர்கள்
திருப்பூர்: 'வெளிநாட்டு வர்த்தகர்களை அழைத்து, உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக சந்திப்பு நடத்தப்படும்' என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தொழில்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழக அரசு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நீண்டகால எதிர்பார்ப்புகளும் தற்போது அறிவிப்புகளாக வெளியாகி வருவதாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகின்றனர். ஈரோடு, கரூர் மாவட்ட ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை, உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையேயான சந்திப்பு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், உற்பத்தியாளர் - வாங்குபவர் சந்திப்பு நடத்தப்படுவது, புதிய மற்றும் நிரந்தரமான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும்.
இதன் வாயிலாக, வெளிநாட்டு வர்த்தகர்களை அழைத்து, ஏற்றுமதியாள ர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக அறிமுகப்படுத்தி, வர்த்தக விசாரணை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
@block_B@
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ஏற்றுமதியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்களை அழைத்து, அரசு ஒருங்கிணைப்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தும்போது, திருப்பூரின் பசுமை சார்ந்த ஆடை உற்பத்தி சாதனைகளை எளிதாக விளக்கி, கூடுதல் ஆர்டர்களை பெற முடியும். ஆண்டுக்கு நடத்தப்படும் நான்கு சந்திப்புகளில், பின்னலாடை உள்ளிட்ட ஆடை ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், வெளிநாட்டு வர்த்தகர்களை அழைத்து திருப்பூரில் இரண்டு சந்திப்புகளை நடத்த அரசு திட்டமிட வேண்டும் என்றார்.block_B
மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்