பஸ்சில் பயணித்த பெண் நெஞ்சு வலியால் சாவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பஸ்சில் சென்ற பெண் நெஞ்சு வலியால் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கூவனுாரைச் சேர்ந்தவர் சேட்டு மனைவி பாஞ்சாலை, 50; இவர், கடந்த 6 ஆண்டுகளாக கோயம்புத்துாரில் கட்டுமான வேலை செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்ட பாஞ்சாலை கோயம்புத்துாரில் இருந்து பஸ்சில் கள்ளக்குறிச்சிக்கு வந்தார்.
அங்கிருந்து மணலுார்பேட்டைக்கு செல்லும் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். நீலமங்கலம் அருகே சென்றபோது பாஞ்சாலைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன், அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பாஞ்சாலை இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு
Advertisement
Advertisement