சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி 

விழுப்புரம்:  விழுப்புரத்தில் குண்டும் குழியுமாகி, சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

விழுப்புரம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம் பின்புறமுள்ள கமலா கண்ணப்பன் நகர் மெயின் ரோட்டில், பல இடங்களில் சாலை சேதமடைந்து மேடும், பள்ளமுமாக கிடக்கிறது.

இந்நிலையில், அந்த சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து தேங்கி நிற்கிறது. அதனால், மேலும் சாலை குண்டும் குழியுமாகி வருகிறது.

தற்போது, மழை பெய்ததால், கழிவுநீருடன், மழை நீரும் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், சாலை சேதமடைந்து, கழிவுநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்பட்டு செல்கின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement