மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி

கயத்தாறு : கயத்தாறு அருகே, மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில்,- பிரனேஷ், 25, என்பவர் உயிரிழந்தார்; நால்வர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் பிரனேஷ். இவர், நண்பர்கள் சுயம்புலிங்கம், முத்துலிங்கம், வினோத், சுஜித் ஆகியோருடன் செப்., 4ல் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
நேற்று காலை, துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே, தேவர்குளம் ஜங்ஷன் மேம்பாலத்தில் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தடுப்பு சுவரில் பலமாக மோதியதில், காரை ஓட்டி வந்த பிரனேஷ் உயிரிழந்தார். சுயம்புலிங்கம், வினோத், சுஜித், முத்துலிங்கம் படுகாயமடைந்தனர்.

கயத்தாறு போலீசார், பிரனேஷ் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்தவர்களை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement