மாட்டின் வாலை வெட்டி மாந்த்ரீக பூஜை: மனநலம் பாதித்த நபரை மீட்ட போலீசார்
திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, மாட்டின் வாலை வெட்டி மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட மனநலம் பாதித்தவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த கரம்பூர் ஏரிக்கரையை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனி, 52. சில நாட்களுக்கு முன், கந்திலியிலுள்ள உறவினர் வீட்டில் நடந்த பேய் விரட்டும் பூஜையில் பங்கேற்றார்.
வீடு திரும்பியதில் இருந்து, அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி, பக்கத்து வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தார். இதனால் மக்கள் இவரை கண்டு ஒதுங்கினர்.
ஒரு வாரமாக, தன் மீது கருப்பன்சாமி இறங்கி இருக்கிறான் எனக்கூறி, தன் மனைவியுடன் இரவில் வீதிகளில் சுற்றித்திரிந்து, யாராவது என்னை தொந்தரவு செய்தால், இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விடுவேன் என, மிரட்டியுள்ளார். இதனால் கிராம மக்கள், இவரை கண்டு அச்சத்தில் ஒதுங்கினர்.
நேற்று முன்தினம், அவரது வீட்டிலிருந்த மாட்டின் வாலை வெட்டி, மாந்திரீக பூஜை செய்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என அஞ்சிய கிராம மக்கள், அவரை கட்டி வைத்து, குரிசிலாப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் அங்கிருந்தவர்களை, பழனி, மந்திரங்களை கூறி மிரட்டியதால், மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு, போலீசார் வந்து பழனியை மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் கூறுகையில், 'அவர் மனநலம் பாதித்தவர்' என தெரிவித்தனர். இந்த வீடியோ பரவி வருகிறது.
மேலும்
-
இஷான் கிஷான் அரைசதம்: கிழக்கு மண்டல அணி முன்னிலை
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகை, பணம் அபகரித்த ஆசாமி கைது
-
சிதம்பரத்தில் போலி நகை கொடுத்து புதிய நகையை திருடிய 3 பேர் கைது
-
‘நடப்பது’ எல்லாம் நன்மைக்கே...
-
அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில்
-
6,981 வழக்குகளில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்