பிரதமர் மோடியை அவமதித்து இணையத்தில் பதிவு; பெண் ஏ.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
நமது நிருபர்
பிரதமர் மோடி, மத்திய அரசை அவமதிக்கும் வகையில் விமர்சித்து 'பேஸ் புக்' க்கில் பதிவிட்ட இடுக்கி குற்றப்பிரிவு ஏ.எஸ்.ஐ., சஜிதா 'சஸ்பெண்ட் ' செய்யப்பட்டார்.
இவர், பிரதமர், மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளையும் விமர்சித்து சட்டவிரோதமாக 'பேஸ் புக்'கில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அது குறித்து இடுக்கி எஸ்.பி., விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி எர்ணாகுளம் குற்றப்பிரிவு ஐ.ஜி., ஷியாம்சுந்தர், சஜிதாவை 'சஸ்பெண்ட்' செய்தார்.
அச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு எர்ணாகுளம் குற்றப்பிரிவு துணை டி. எஸ். பி. பிரசாத்க்கு உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி
-
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை'
-
தகராறில் மாமனாரை வெட்டிவிட்டு தப்பியோடிய மருமகனுக்கு 'வலை'
-
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி விவசாயிகள் மறியல்
-
மாட்டின் வாலை வெட்டி மாந்த்ரீக பூஜை: மனநலம் பாதித்த நபரை மீட்ட போலீசார்
-
நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்
Advertisement
Advertisement