பட்டு விவசாயிகள் விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல்:சாணார்பட்டி வட்டார வேளாண் அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை, மத்திய பட்டு வாரியம் சார்பில் 'என் பட்டு என் பெருமை 2.0' என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜான்பார்த்திபன் தலைமை வகித்தார். தோட்ட பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநர் ராம்ராஜ் நீர் மேலாண்மை நடைமுறையை இயந்திரப்படுத்தும் முறை குறித்தும், மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி பவித்ரன் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தும் விளக்கம் அளித்தனர்.
முகாமில் 35-க்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் பங்கேற்று தங்களுக்கான பயிர் சாகுபடி சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement