எம்.எல்.ஏ.,வின் சகோதரி வீட்டில் நகைகள், வெள்ளி கொள்ளை தியாகதுருகத்தில் பரபரப்பு  

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் எம்.எல்.ஏ.,வின் சகோதரி வீட்டில் 12 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனின் தங்கை பனிமலர், 40; இவர் தனது குடும்பத்தினருடன் தியாகதுருகம், தாய் நகரில் வசித்து வருகிறார்.

செப்., 7 இரவு சாத்தனுாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பனிமலர் சென்றிருந்தார்.

செப்., 8 காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பூட்டை உடைத்து 12 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ள போனது தெரியவந்தது..

தகவலறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். தொடர்ந்து கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

எம்.எல்.ஏ., தங்கை வீட்டில் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement