கொடைக்கானல் டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள்
திண்டுக்கல், செப்.9-
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் டேக் டி.டி.சி.ஏ., பவான்ஸ் கோப்பைக்கான கொடைக்கானல் டிவிஷன் லீக் போட்டிகள் கொடைக்கானல் பவான்ஸ் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
அதன்படி பெஸ்ட் லெவன் அணி, எங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெஸ்ட் லெவன் அணி 22 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய எங்ஸ்டர்ஸ் சி.சி., அணி 11.2 ஓவரில் 2 விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணிக்கு சார்பில் அருண்குமார் 75 ரன்கள் எடுத்தார்.
லேக் பிரண்ட்ஸ் அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. ஸ்டீபன் 58, இன்பராஜ் 40 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் அணி 22.3 ஓவரில் 95 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
குருசடிமேடு சி.சி., அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய புனித பீட்டர்ஸ் பள்ளி அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழந்து 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ்குமார் 70 ரன்கள் எடுத்தார்.
பவான்ஸ் காந்தி வித்யாஸரம் அணி 14.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய வில்பட்டி கோல்டன் ஸ்டார் அணி 6.2 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பிளாக் மாம்பாஸ் சி.சி., அணி லயன்ஸ் சி.சி., அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பிளாக் மாம்பாஸ் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லயன்ஸ் அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 71 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
மேலும்
-
இடைத் தேர்தலில் யாரெல்லாம் வீட்டில் இருந்தே ஓட்டளிக்கலாம்
-
பெத்தி செமினேர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் புனித ஆரோக்கிய அன்னையின் பெருவிழா
-
வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்க ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தல்
-
அச்சுறுத்தும் ஒற்றை யானை
-
‘சில்லி சிக்கனில் செயற்கை நிறம் சேர்த்து விற்றால் உடனே அபராதம்’
-
பிரதோஷ வழிபாட்டில் சிவனடியார்கள் பரவசம்