குருவி வடிவில் அபூர்வ தக்காளி
புதுக்கோட்டை:வாரச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தக்காளிகளில், குருவி வடிவிலான அபூர்வ தக்காளி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தையில் நேற்று வியாபாரி ஒருவர் தக்காளி விற்பனை கொண்டிருந்த போது, இந்த அபூர்வ தக்காளி அவரது கண்ணில்பட்டுள்ளது. சாதாரண உருண்டை வடிவில் இல்லாமல், குருவி ஒன்று அமர்ந்திருப்பது போன்ற தலை, அலகு மற்றும் இறக்கைகளுடன் கூடிய வடிவத்தில் இந்த தக்காளி இயற்கையாகவே அமைந்திருந்தது.
இதை பார்த்த சக வியாபாரிகளும், சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் பெரும் ஆச்சரியமடைந்தனர். தகவல் அறிந்ததும், பொதுமக்கள் பலர் அந்த தக்காளியை ஆர்வத்துடன் வந்து பார்த்து, தங்கள் மொபைல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சென்றனர்.
இயற்கையின் இந்த விசித்திர வளர்ச்சி மாற்றம் குறித்த போட்டோ, தற்போது அப்பகுதி மக்களின் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும்
-
கருவளையம் நீங்க...முகம் பொலிவாக உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்
-
ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் மீட்பு; வனத்துறை விசாரணை
-
காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு
-
இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்; திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்
-
வீட்டின் கூரை மீது காரை 'பார்க்' செய்த குடும்பம்; ஆனந்த் மஹிந்திரா கவலை