காஸ் சிலிண்டர்கள் திருட்டு: இருவர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காஸ் குடோன் பூட்டை உடைத்து 32 சிலிண்டர்கள், சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த ஜோதி பாபு, துாத்துக்குடி மாவட்டம் கோனார்குளம் கிராமத்தில் காஸ் குடோன் நடத்தி வருகிறார்.

செப்.4 இரவு இங்கிருந்த 32 காஸ் சிலிண்டர்கள் மற்றும் சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட வல்லநாட்டை சேர்ந்த சின்னதுரை, மணிமந்திரம் ஆகிய இருவரை கைது செய்தனர். திருடப்பட்ட சரக்கு வாகனம், 32 காஸ் சிலிண்டர்களையும் மீட்டனர்.

Advertisement