குழந்தையை ஒப்படைக்க மறுக்கும் மாமியார்: கலெக்டரிடம் தம்பதி மனு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே, காக்கா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம், 32. இவரது மனைவி அஜித்ரா, 28. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இருவரும் பேசி, மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். அப்போது, தம்பதியின் பெண் குழந்தையை மீண்டும் அவர்களிடமே வழங்க அஜித்ராவின் தாய் பிரசன்ன குமாரி மறுத்தார். நாகரத்தினம், அஜித்ராவை கடத்திவிட்டதாக போலீசில் அவரது தாய் புகாரளித்தார். விசாரணைக்கு ஆஜரான அஜித்ரா, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், கணவருடன் தான் சென்றதாகவும் கூறினார். தொடர்ந்து, தங்கள் குழந்தையை மீட்டுத்தருமாறு போலீசாரிடம் தம்பதி புகாரளித்தனர். கலெக்டர் அலுவலகத்திலும் அவர்கள் மனு அளித்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்
-
திமுக செய்த தவறுகளை சொல்லியே ஆக வேண்டும்; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு
-
இந்தியாவுக்கு திரும்புவதை திட்டமிட்டே தவிர்க்கவில்லை; சொல்கிறார் விஜய் மல்லையா
-
தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்; நிதியை வேறு பணிகளுக்கு திருப்பி விட்டது அம்பலம்!
-
ஈரானுக்கு உதவி செய்த 27 விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
-
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு உயர்வு; ராஜ்நாத் சிங் பெருமிதம்