சுங்கச்சாவடியை அகற்ற லாரி ஓனர்கள் கோரிக்கை

சேலம்: சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க மகாசபை கூட்டம், ஜாகீர் அம்மாபாளையத்தில் நேற்று நடந்தது. தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். அதில் சேலத்தில் லாரி நிலையம் அமைத்து தருதல்; கருப்பூர் சுங்கச்சாவடியை அகற்றுதல் உள்பட, 8 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலர் குமார், பொரு-ளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தொடர்ந்து தனராஜ் அளித்த பேட்டி: லாரிகளில் டீசல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு வடமாநிலங்-களில் மட்டும் நடந்தது. தற்போது தமிழகத்தில், இரவில் சாலை-யோரம் நிற்கும் லாரிகளில் டீசல் திருட்டு சம்பவம் அதிகரித்துள்-ளது. தார்ப்பாய்களை வெட்டி பொருட்களும் திருடப்படுகின்றன. இதை தடுக்க நெடுஞ்சாலைகளில், போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, லாரியில் இருந்து டீசல் திருடு
பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

Advertisement