ஜி.ஹெச்.,ல் பைக் திருட்டு

சேலம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், ஒடுவங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக், 32. இவர் கடந்த ஆக., 9ல் சேலம் அரசு மருத்துவம-னைக்கு வந்து, 'ஸ்பிளன்டர் பிளஸ்' பைக்கை, கண்ணாடி மாளிகை அருகே நிறுத்திவிட்டு, வார்டுக்கு சென்றார்.

சில மணி நேரம் கழித்து வந்தபோது பைக்கை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சேலம் அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement