பாட்டி வீட்டில் திருடிய பேரன் கைது

ஓமலுார்: ஓமலுார், பாகல்பட்டி பெருமாள் கோவில் அருகே வசிப்பவர் சின்னக்கண்ணு, 65. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டிவிட்டு, அருகே உள்ள பெருமாள் கோவிலில் படுத்துள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது. வீட்டில் பேத்திக்கு வைத்திருந்த, அரை பவுன் கொண்ட ஒரு ஜோடி தோடு, வெள்ளிகொலுசு ஆகியவற்றை காண-வில்லை.


இதுகுறித்து சின்னக்கண்ணு புகார்படி, ஓமலுார் போலீசார் வந்து, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து, பாட்டியின் பேரனான, பாகல்பட்டி, ராஜ வீதியை சேர்ந்த கணேசன், 25, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement