சென்னை - போத்தனுார் சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பயணியர் நெரிசலை தவிர்க்க, சென்னை சென்ட்ரல் - போத்தனுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படு
கிறது.
அதன்படி நாளை இரவு, 11:50க்கு சென்னை, சென்ட்-ரலில் புறப்படும் ரயில், மறுநாள் காலை, 9:00 மணிக்கு போத்த-னுாரை அடையும். இந்த ரயில் நள்ளிரவு, 12:03க்கு பெரம்பூர், 12:33க்கு திருவள்ளூர், 12:58க்கு அரக்கோணம், 1:48க்கு காட்-பாடி, 3:15க்கு ஜோலார்பேட்டை, அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 6:05க்கு ஈரோடு, 6:58க்கு திருப்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.மறுமார்க்க ரயில், வரும், 14 இரவு, 11:30 மணிக்கு போத்தனுார் சந்திப்பில் புறப்பட்டு, மறுநாள் காலை, 9:25க்கு சென்னை சென்ட்ரலை அடையும். இந்த ரயில் நள்ளிரவு, 12:08க்கு திருப்பூர், 12:50க்கு ஈரோடு, 1:47க்கு சேலம், அதிகாலை, 5:00 மணிக்கு ஜோலார்பேட்டை, 6:33க்கு காட்பாடி, 8:08க்கு அரக்-கோணம், 8:33க்கு திருவள்ளூர், 9:03க்கு பெரம்பூர் ஸ்டேஷன்-களில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.