'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

சேலம்: சேலம் விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா, மாணவ சங்க பேரவை மூலம் கொண்டாடப்பட்டது. முன்னதாக துறை பேராசி-ரியர்களை, மாணவ, மாணவியர், பூங்கொத்து கொடுத்து வரவேற்-றனர். டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து, விழா ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரி-வித்தார்.


தொடர்ந்து, மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்வதன் முக்கி-யத்துவம் குறித்தும், ஆசிரியர்களும் சமீபத்திய வளர்ச்சிக்கு ஏற்ப திறனை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்படுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.பின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. மேலும் மாணவர்கள், டீனுக்கும், பேராசிரியர்களுக்கும் நினைவுப்
பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி மாணவ பேரவை அமைப்பின்
உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Advertisement