கருவளையம் நீங்க...முகம் பொலிவாக உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்
கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க, முகம் பொலிவு பெற உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறி எது வென்றால் உருளைக்கிழங்கு தான். இது சமையலுக்கும் மட்டுமல்ல, சரும பராமரிப்புக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
குறிப்பாக இளம் பெண்களின் முக அழகைக் கெடுக்கும் வகையில் அவர்களது முகத்தில் தெரியும் கருவளையம், சரும சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைப்பற்கு உருளைக் கிழங்கு பெரிதும் உதவுகிறது. இதற்கு உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கில் அசெலிக் அமிலம் உள்ளது, இது இயற்கையான சருமத்தை பளபளப்பாக்கும் ஏஜெண்டாகச் செயல்படுகிறது. எனவே, உருளைக்கிழங்கு சாப்பிடுவதும், முகத்தில் பேக் ஆக தடவிக் கொள்வதும் வடுக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் மறைவதை துரிதப்படுத்துகிறது.
உருளைக்கிழங்கு ஊட்டச்சத்துக்கள்:
உருளைக்கிழங்கில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் மற்றும் சரும சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. அதுபோல அதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ரேடிக்கல்கள் எதிர்த்து போராடி சருமத்தை எளிமையாக வைக்க உதவுகிறது.
பேஸ்பேக்:
உருளைக்கிழங்கை அரைத்து அதை முகத்தில் நேரடியாக தடவி பேஸ் பேக்காக போட்டு, 20 நிமிடங்கள் கழித்து அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையத்தை நீக்கவும், முகத்தை எப்போதுமே பொலிவாக வைக்கவும் உதவுகிறது.
மஞ்சளுடன் உருளைக்கிழங்கு:
அரை உருளைக்கிழங்கை லேசாக அரைத்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பிறகு முகத்தை சூடான நீரில் கழுவ வேண்டும். உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்து முகத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது.
எலுமிச்சையுடன் உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை சொரசொரப்பாக அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் பேஸ் பேக்காக போட்டு, பிறகு குளித்த நீரில் முகத்தை கழுவவும். இந்த பேஸ் பேக்கானது முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் போட்டால் போதும்.
மேலும்
-
அனுமதி பெற்ற பிறகே பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அறிவுறுத்தல்
-
தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்
-
மன ஆரோக்கியத்திற்கு மனிதர்களை உள்ளபடியே ஏற்க பழக வேண்டும் கே.ஜி., மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.பக்தவத்சலம் பேச்சு
-
ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற பிரத்யங்கராதேவி நிகும்பல மஹாயாக வழபாடு
-
நொய்யல் கரையில் விதி மீறி ரோடு வருவாய் துறையினர் தடை
-
1.3 கிலோ கஞ்சா பறிமுதல் காரைக்காலில் 3 பேர் கைது