ரூ.9.5 லட்சம் மோசடி ஒருவருக்கு 'காப்பு'

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், ஜானகி நகர், ஓந்தாப்பிள்ளைகாடை சேர்ந்தவர் தர்மராஜ், 44. இவருக்கு சின்னதிருப்பதி, காமாட்சி நகர்,
சுப்புராயன் தெருவில் வசிக்கும் குமார், 47, என்பவரும், அவர் மூலம் செந்தாரப்பட்டி, பாலையா தெருவை சேர்ந்த ரவி என்பவ-ருடன் பழக்கமாகினர். இந்த இருவரும், தர்மராஜிடம் அரசு பதி-வுத்துறையில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறினார்.


அதற்கு, 9.5 லட்சம் ரூபாய் கேட்டனர். தர்மராஜூம் நம்பி, 2021 முதல், பல்வேறு தவணைகள் மற்றும் 'ஜிபே' மூலமும், 9.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தர்மராஜ் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் வழக்-குப்பதிந்தனர். அதில் குமாரை நேற்று கைது செய்தனர்.

Advertisement