ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் சிறைபிடிப்பு

4

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரானின், ஐந்து எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க கடற்படையின் அதிநவீன நீர்மூழ்கி கப்பலை சிறை பிடித்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி முதல் மோதல் நீடித்து வருகிறது. அணுசக்தி விவகாரம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, லெபனான் மீதான தாக்குதல் உட்பட பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்படாததால், மோதல் தொடர்கிறது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தி நுழைவாயிலில் அமெரிக்காவின் போர்க் கப்பல் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்காவின், 'எம்.கியூ., - 9 ரீப்பர் ட்ரோன்' எனப்படும் உளவு பார்க்கும் சிறிய ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரானின், ஐந்து எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள், நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு சில மணி நேர இடைவெளியில், அமெரிக்காவின் அதிநவீன 'டைவ் - எல்டி' என்ற நீர்மூழ்கி கப்பலை சிறை பிடித்துள்ளதாக, ஈரான் கூறியுள்ளது.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த நீர்மூழ்கி கப்பல் பழுதடைந்துள்ளதாகவும், அதில் எவ்வித ரகசியத் தகவல்களும் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

@block_B@

ஜோர்டான் மீது தாக்குதல்

மேற்காசிய நாடான ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதல்களை நேற்று நடத்தியுள்ளது. தங்கள் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள அல் அஸ்ராக் விமானப்படை தளத்தை குறிவைத்து 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த பழுதுபார்ப்பு நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.block_B

@block_B@

ஈரான் விமான நிறுவனங்களுக்கு தடை

ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், எஞ்சியிருக்கும், 27 விமான நிறுவனங்களையும் அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆயுதங்களை ரகசியமாக கடத்தவும், வீரர்களை பயணிக்கச் செய்யவும் இந்த நிறுவனங்கள், தங்களுடைய விமானங்களை பயன்படுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஈரானுக்கு விமானங்களை வாங்கவும், உதிரிபாகங்களை வழங்கவும் உதவிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, மலேஷியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீதும் இந்தத் தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.block_B

Advertisement