உலக கூடைப்பந்து: அரையிறுதியில் அமெரிக்கா
பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் 'நடப்பு சாம்பியன்' அமெரிக்கா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா 108-56 (36-12, 23-18, 34-17, 15-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
லிவர்பூல் அணி வெற்றி
லண்டன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 72வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில், இங்கிலாந்தின் லிவர்பூல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஆர்சனல் அணி (இங்கிலாந்து) 1-0 என, நபோலி அணியை (இத்தாலி) வென்றது.
முதல் வீரர் மெஸ்ஸி
சிகாகோ: அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. சிகாகோவில் நடந்த போட்டியில் இன்டர் மயாமி, சிகாகோ பயர் அணிகள் மோதின. மயாமி அணியின் மெஸ்ஸி 'அசிஸ்ட்' செய்த பந்தில் கேஸ்மிரோ ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இது, 'நடப்பு சீசனில்' மெஸ்ஸியின் 13வது 'அசிஸ்ட்'. தவிர இவர், 18 கோல் அடித்துள்ளார். எம்.எல்.எஸ்., வரலாற்றில், மூன்று சீசனில் தலா 30+ கோல் பதிவாக காரணமான முதல் வீரரானார் மெஸ்ஸி.
'நாக்-அவுட்' சுற்றில் இத்தாலி
லாட்ஸ்: போலந்தில், பெண்களுக்கான (20 வயது) உலக கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. இதன் 'டி' பிரிவு லீக் போட்டியில் இத்தாலி, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 3-0 என வெற்றி பெற்றது. ஏற்கனவே அமெரிக்காவை வீழ்த்திய இத்தாலி அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து, 'நாக்-அவுட்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது.
எக்ஸ்டிராஸ்
* ஜப்பானில் நடக்கும் வாலிபால் 'கான்டினென்டல்' சாம்பியன்ஷிப் காலிறுதியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
* முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், 'கனடா சூப்பர் 60' தொடரில் பங்கேற்கும் 'வான்கூவர் ஆங்கர்ஸ்' அணியின் உரிமையாளர் குழுவில் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த அணியின் இணை உரிமையாளராக முன்னாள் இந்திய 'ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் உள்ளார்.
* ஆமதாபாத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை 'பாரா சீரிஸ்' ('ஸ்டேஜ்-3') தொடர் நடந்தது. இதில் 4 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என, 15 பதக்கம் கைப்பற்றிய இந்தியா 2வது இடம் பிடித்தது. செக்குடியரசு அணி (5 தங்கம்) முதலிடத்தை கைப்பற்றியது. சீனாவுக்கு (2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம்) 3வது இடம் கிடைத்தது.
* இந்தோனேஷியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் கரன் சிங் 6-0, 6-3 என, இந்தோனேஷியாவின் அலி டா கோஸ்டாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-3, 4-6, 6-3 என சகவீரர் அர்ஜுன் ரதியை வென்றார்.
* வியட்நாம் ஓபன் பாட்மின்டன் 3வது சுற்றில் இந்தியாவின் பிரனாய் 21-15, 13-21, 21-14 என, சீனதைபேயின் ஜெ யிங் உவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையரில் தான்வி சர்மா 26-24, 21-12 என தாய்லாந்தின் பாசா-ஆர்னை வென்றார்.
மேலும்
-
மானியத்தில் வேளாண் கருவிகள்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
-
ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் 6ம் ஆண்டு துவக்க விழா
-
கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் தொடர் மின்வெட்டால் அவதி
-
'இளம் தலைவர்கள் உரையாடல் - 2027' வினாடி - வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு
-
மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு ரூ.5.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 1,937 அரசு ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்பு