உணவு கழிவுகளை கையாள்வது எப்படி? விழிப்புணர்வு கூட்டத்தில் விளக்கம்

அவிநாசி: அவிநாசியில் ஹோட்டல்கள், பேக்கரிகள், கேண்டீன்கள், ரெஸ்டாரன்ட்கள், மெஸ் ஆகியவற்றில் உணவு தயாரித்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அவிநாசி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஸ்டாலின் பிரபு தலைமை வகித்தார்.கூட்டத்தில், உணவு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் உணவு தயாரிப்பு வளாகங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதுமான காற்றோட்ட வசதி மற்றும் அவசரகால வழி அமைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் உணவு கையாளும் பகுதிகளில் சேராமல் அவ்வப்போது அகற்ற வேண்டும். அனைத்து மூலப்பொருட்களையும் உணவு தயாரிப்பதற்கு முன்பு சுத்தம் செய்ய வேண்டும். சைவம் மற்றும் அசைவ உணவுகளை தனித்தனியாக பிரித்து கையாள வேண்டும். கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.





Advertisement