பழநி நில மோசடியில் திருப்பம்; பெண் ஊழியர், வக்கீல் அதிரடி கைது

1

சென்னை: பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபானி மடத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இன்று (அக் 07) போலி பத்திரப்பதிவுக்கு உதவிய பழநி சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி மற்றும் போலி பத்திரம் தயாரித்து கொடுத்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமார் ஆகிய இருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

சிறப்பு வீடியோ!

பழநி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement