ரெப்போ வட்டி விகிதம் 5.5%ஆக உயர்வு; வீட்டு கடன், வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு
புதுடில்லி: வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.
நிருபர்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. வரும் காலங்களில், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். ரிசக்தி செலவுகள் மற்றும் உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலைகளால், உலகளாவிய பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும், என்றார்.
ஆரம்பமாகட்டும் ஜால்ரா ரெடி ஸ்ட்டார்ட்
பெட்ரோல் விலை உயர்ந்த போதும் சென்ற ஆண்டில் வண்டிகளின் விற்பனை முப்பத்திரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வுக்கெல்லாம் ஜென் சீ இளசுகள் அஞ்சாது. வண்டிதான் கெத்து. வண்டியில்லாமல் காதல் இல்லை. கிடைக்காது.
ஹையா ரிடையர் ஆனங்களுக்கு வட்டி அதிகம் கிடைக்கும்மேலும்
-
என்றென்றும் நிலைத்திருக்கும் வரலாறு: மெஸ்ஸியின் ஓய்வு குறித்து இன்ஸ்டாவில் ரொனால்டோ பதிவு
-
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு; எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு பதில்
-
சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்
-
உலக முதியோர் தின விழா
-
சாலையோரம் சென்ற பச்சோந்தி நிறம் மாறுவதை கண்டு வியந்த மக்கள்
-
மொபைல் ஹேக் செய்து ரூ.2.95 லட்சம் மோசடி