அமேதியில் போட்டியிட ராகுல் மிகவும் பயந்தார்: உண்மையை உடைத்தார் சமாஜ்வாதி எம்.பி.,

11

லக்னோ: கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் மிகுந்த பயத்தின் காரணமாகவே அமேதிக்குப் பதிலாக ரேபரேலியில் போட்டியிட்டார் என சமாஜ்வாதி கட்சி எம்பி ஷிவ் பால் சிங் படேல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் வரும் 2027ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில், ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு சமாஜ்வாதி கட்சி எம்பி சிவ்பால் சிங் படேல் அளித்த பேட்டியில், '' 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் தனது பாரம்பரிய தொகுதியான அமேதியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தார், அங்கிருந்து போட்டியிட அவர் மிகவும் பயந்தார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் ராகுலை வற்புறுத்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு சமாதானப்படுத்தினார். ராகுல் போட்டியிடாவிட்டால், அந்தத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தனது சொந்த வேட்பாளரை நிறுத்தும் என்றும் அகிலேஷ் எச்சரித்திருந்தார். அதன் பிறகே ராகுல் போட்டியிட ஒப்புக்கொண்டார். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது.

சமாஜ்வாதி கட்சியின் ஓட்டுக்கள் விழுந்ததால் தான் காங்கிரஸ் 6 இடங்களில் வென்றது. மேலும் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் 50 இடங்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இவரது பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது.





@block_B@

காங்கிரஸ் பதிலடி



இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி உடனடியாகப் பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், ''இத்தகைய தேவையற்ற கருத்துக்களைக் கூறும் தலைவர்களை சமாஜ்வாதி கட்சி உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்; இண்டி கூட்டணியின் காரணமாகத்தான் சிவ்பால் சிங் படேல் எம்பியாகவே ஆகியுள்ளார் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. அவர் தனது எல்லையைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும்" என்றார்.block_B





@block_G@

அகிலேஷ் தலையீடு



இரு கட்சிகளுக்கும் இடையே பொதுவெளியில் மோதல் முற்றியதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டார். ''இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் பிற கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில் பேசக் கூடாது; கட்சித் தலைவர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், அதை ஊடகங்களிடம் பேசாமல் கட்சியின் உள்விவகாரக் குழுவிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்'' என தனது கட்சியினருக்கு அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்.block_G

Advertisement