மாணவரை தாக்கிய வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவரை தாக்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

புதுச்சேரி எல்லை மற்றும் நகர பகுதி ஒட்டியுள்ள 2 கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுக்கள் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஒரு கும்பலை சேர்ந்த மாணவரை, எதிர் கும்பல் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்றனர். மேட்டுப்பாளையம் அருகே மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற கும்பல், அந்த மாணவரை சுற்றி வளைத்து தாக்கியது.

அதனை வீடியோவாக எடுத்து கல்லுாரி மாணவர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement