ஓட்டளித்தவர்களின் தன்மானத்தை விலை பேசியுள்ளனர்; ஸ்டாலின் குற்றச்சாட்டு

22

சென்னை: ''ஓட்டளித்தவர்களின் தன்மானத்தை விலை பேசியுள்ளனர்; இந்த தேர்தலில் பாடம் புகட்டினால் தான் இனி அநியாயம் நடக்காது'' என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

இடைத்தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மானமிக்க மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களே என்ற தலைப்புடன் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களே, தவெகவின் ஆணவத்துக்கு சரியான பாடம் புகட்டுங்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்காக தற்போதைய ஆட்சி அமையவில்லை; மாபியா கும்பல்கள் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதற்காக தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது.

தமிழகத்தைப் பின்நோக்கி அழைத்துச் செல்லப்போகிறார்கள். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்பதில் தான் தவெகவின் கவனம் உள்ளது; ஆளுங்கட்சியினரின் ஆணவத்துக்கும், வேட்பாளரின் துரோகத்துக்கும் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்; ஓட்டளித்தவர்களின் தன்மானத்தை விலை பேசியுள்ளனர்; இந்த தேர்தலில் பாடம் புகட்டினால் தான் இனி அநியாயம் நடக்காது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு வீடியோ தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement