காட்சி பொருளான சுகாதார வளாகம்

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மப்சல் பஸ்களும், சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில், குடிநீர், கழிப்பறை, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

ஏற்கனவே சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாமல் இருந்த சுகாதார வளாகம், புதுப்பிக்கும் பணி துவங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்தும், சுகாதார வளாகம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement