சீமைக்கருவேல மரங்களை அகற்றும் செலவு நில உரிமையாளர்களிடம் வசூல்

கோவை: புறநகர் பகுதிகளில் உள்ள காலி நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கலெக்டர் பவன்குமார் கூறியதாவது:

ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரங்களின் அளவை பொறுத்து ஏலம் போகிறது.

ஏலம் எடுக்கப்படாத மரங்களை, ஊராட்சி நிர்வாகத்தின் சொந்த நிதியில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒருமுறை அகற்றிய இடங்களில் மீண்டும் மரங்கள் வளராமல், கருவிகளை கொண்டு வேரோடு அகற்ற வேண்டும்.

சீமைக்கருவேல மரங்களை அகற்ற, தனியார் நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் மரங்களை அகற்றாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவை அகற்றப்பட்டு, செலவு, நில உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். இப்பணிக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களது சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்.,) மூலம் பங்களிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement