நம்பினால் வாழ்வில் சந்தோஷம்: தடகள வீராங்கனை 'அட்வைஸ்'
போத்தனுார்: ''பெற்றோரை நம்புங்கள்; கஷ்டப்படுங்கள்; வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்,'' என, தடகள வீராங்கனை வித்யா அறிவுறுத்தினார்.
ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில், கோவையை சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கோவை திரும்பிய இவருக்கு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, ரோஜா மாலை, பொன்னாடை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்குள்ள தனியார் மருத்துவமனை சார்பில், பொன்னாடை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாலத்துறை, வழுக்குப்பாறை, மீனாட்சிபுரத்தில் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
வித்யா கூறியதாவது:
மக்கள், எனக்கு கொடுத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக, கோவையை சேர்ந்த பெண் என்பது மிகுந்த பெருமையாக உள்ளது. கடந்த முறையும் நான் பதக்கம் வென்றேன். அப்போது கிடைக்காத வரவேற்பு, தற்போது கிடைத்துள்ளது. நம் நாட்டில் தடகளம் மென்மேலும் வளர்ந்து வருகிறது. அடுத்தாண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி வருகிறது. அதற்கான பயிற்சியை துவக்கவுள்ளேன்.
அரசு அனைத்து உதவிகளையும் தர தயாராக உள்ளது. நாம் அதற்கேற்ப திருப்பி தர வேண்டும். குறிப்பாக, மாநில அரசு. வாழ்க்கையில் கஷ்டப்படுங்கள்; அப்போதுதான் சந்தோஷமாக இருக்க முடியும். பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்டால், வாழ்க்கையில் முன்னேற முடியும். நான், இந்த இடத்தில் இருப்பதற்கு, எனது ஆசிரியர், பயிற்சியாளர், பெற்றோர் தான் முக்கிய காரணம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
ஆகமவிதிகளுக்குறிய திருக்கோயில்கள் குறித்து மக்கள் கருத்துகள் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு
-
சப் இன்ஸ்பெக்டருக்கு காந்தியடிகள் காவலர் விருது
-
காய்கறி சாகுபடியில் தோட்டக்கலை மானியம்
-
ஐவர் கால்பந்து போட்டி
-
காந்தி சேவா அறக்கட்டளை முப்பெரும் விழா: சாதனையாளர்களுக்கு நினைவு பரிசு
-
முதலீடு செய்து வருவாய் ஈட்ட ஆசை.. ஆசை..! நான்கு வழக்கில் 25 கோடிஇழப்பு