காந்தி சேவா அறக்கட்டளை முப்பெரும் விழா: சாதனையாளர்களுக்கு நினைவு பரிசு
மஞ்சூர்: மஞ்சூரில் நடந்த காந்தி சேவா அறக்கட்டளை முப்பெரும் விழாவில் நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மஞ்சூரில் உள்ள காந்தி சேவா அறக்கட்டளை சார்பில் மகாத்மாகாந்தியின் 158ம்ஆண்டு ஜெயந்தி விழா, அறக்கட்டளை 25ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் 17ம்ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். முள்ளிமலை ஊர்தலைவர் போஜாகவுடர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அறக்கட்டளை செயலாளர் போஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ஊட்டி எம்.எல்.ஏ.போஜராஜன், மும்பை தொழிலதிபர் சிவராஜ், பல்லடம் அரசு கலை கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணன், பாலகொலா ஊராட்சி முன்னாள் துணை தலைவர் மஞ்சைமோகன், ஆகியோர் கலந்து கொண்டார்கள். அறக்கட்டளை மேலாளர் இன்பசாகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
முன்னதாக மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகளுக்கான கல்வி மற்றும் ஊக்க நிதியை பெல் நிறுவன மேலாளர் தனுஜா பிரகாஷ் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் அறக்கட்டளை நிர்வாகி காந்தி நன்றி கூறினார்.
மேலும்
-
எல் நினோவால் வெப்பநிலை அதிகரிக்கும்; வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை
-
340 விரைவு, சொகுசு பஸ்கள் சாதாரண கட்டணத்தில் இயக்கம் : ஆண் பயணியருக்கு கட்டணம் குறைந்தது
-
தினமலர் செய்தி: பணிகள் துவக்கம்
-
கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை
-
பள்ளிக்கு அங்கீகாரம்
-
இயற்கை விவசாய பயிற்சி முகாம்