காய்கறி சாகுபடியில் தோட்டக்கலை மானியம்
ஆத்துார்:தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி பயிர்களுக்கான முட்டுக் கொடுத்தல் இனத்தின் கீழ், மானியம் பெற விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
ஆத்துார் தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆத்துார் ஒன்றியத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் காய்கறி சாகுபடி ஆகிறது. சீவல்சரகு, எஸ்.பாறைப்பட்டி, பாளையங்கோட்டை, போடிக்காமன்வாடி, தொப்பம்பட்டி, கீழக்கோட்டை, அம்பாத்துறை கிராமங்களில், அதிகளவில் காய்கறி சாகுபடி ஆகிறது. 2026 - 20-27 நிதியாண்டிற்கு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் காய்கறி சாகுபடிக்கான, முட்டுக் கொடுத்தல் இனத்தின் கீழ் இலக்கு பெறப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்பும் முட்டுக் கொடுத்தல் தேவைப்படும் பந்தல் காய்கறிகள், தக்காளி, அவரை, சவ்சவ் போன்ற சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், முறையான நில ஆவணங்களான பட்டா, அடங்கல், ஆதார், ஜாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் போட்டோ, நில வரைபடம் உள்ளிட்ட தகவல்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். கள ஆய்வு செய்த பின்னர், மூங்கில், சவுக்கு, கம்பி, கயிறு உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீத மானியம் பரிந்துரைக்க பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது