நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு

நொய்டா: உத்தரபிரதேசத்தின் கவுதம புத்த நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜெவார் சர்வதேச விமான நிலையம். இது நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட உத்தரபிரதேச அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பதவிகளை 25 ஆண்டு நிறைவு செய்த பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது. பாரம்பரியமும், வளர்ச்சியும் உத்தரபிரதேசத்தில் இணைந்து செல்வதாக அவர் கூறினார்.

Advertisement