புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
- நமது நிருபர் -
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தனித்து போட்டியிட்ட திமுகவுக்கு 2664 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது.
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த், காங்., விநாயகம், தி.மு.க., சேதுசெல்வம், இந்திய கம்யூ., சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த அக்., 6ல் நடந்த தேர்தலில் 80.81 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது.
இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைத்து நடந்தது. 4வது சுற்று முடிவில், 8482 ஓட்டுகள் வித்தியாசத்தில் என்ஆர்காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் பதிவான 21756 ஓட்டுக்கள் பதிவாகி இருந்ததால் 3626 ஓட்டுக்கள் (6ல் ஒரு பங்கு) பெற்றால் மட்டுமே டெபாசிட் கிடைக்கும். ஆனால் திமுக 2664 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று டிபாசிட் இழந்தது. நோட்டாவுக்கு 225 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
நாம் தமிழர் கட்சியின் கார்த்திகுமாரி வெறும் 172 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார். இந்திய கம்யூ., கட்சி சார்பில் களம் கண்ட சலீம் வெறும் 310 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
-
போராடும் மாணவர்களை கையாள முழுசுதந்திரம் வழங்க முடியாது; டில்லி போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்
Advertisement
Advertisement