இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-நமது நிருபர்-
தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், அந்த கட்சியின் நான்கு மாத கால ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்றே கருதப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெறாத தவெகவில், அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இணைந்தனர். அவற்றில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுகவினர் முட்டி மோதினர். தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசம் என்பது போல் சித்தரிக்க முயன்றனர்.
எனினும், எதிர்க்கட்சியினரின் பிரசாரங்களை மக்கள் பொருட்படுத்தவில்லை என்பதாகவும், விஜய் தலைமையிலான கூட்டணி அரசு செயல்பாடு குறித்து மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதாகவும் இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது, மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்து தேர்தலில் போட்டியிட வைத்தது ஆகியவற்றையும் மக்கள் பொருட்படுத்தவில்லை; அது தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்மறை பிரசாரத்தையும் வாக்காளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
-
போராடும் மாணவர்களை கையாள முழுசுதந்திரம் வழங்க முடியாது; டில்லி போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்